மூலிகை மருந்து (CELL -9894618455)
- வெட்டி வேர்,
- விலாமிச்சை வேர்,
- தாளிச பத்திரி
- நெல்லி பருப்பு
- இலந்தை கொட்டை பருப்பு
- ஏலம்
- உலர் திராட்சை
- அதிமதுரம்
- குங்குமப்பூ
- சிறுநாகப்பூ
- பதும கேசரம் (தாமரை மகரந்தம்)
- பச்சை கற்பூரம்
- சந்தனம்
- சிறு பீளை
- சதா வேரி
- நிலக்குமிழ் வேர்
- நெருஞ்சில் வேர்
- கற்கடக சிங்கி
- சாதிக்காய்
- தக்கோலம் ,முதலியவை வகைக்கு 35 கிராம்,
- சீந்தில் சர்க்கரை 130 கிராம்,
- கரும்பு சர்க்கரை 260 கிராம்,
- சுக்கு 5 கிராம்,
- திப்பிலி 5 கிராம்,
- அமுக்குரா 5 கிராம்,
- கூகை நீறு 30 கிராம்,
இவற்றை முறைப்படி சூரணம் செய்து வேளைக்கு 3.5 கிராம் தினம் இருவேளை வெண்ணை அல்லது தேனுடன் ,அல்லது நெய்யுடன் உணவுக்கு முன்னால் சாப்பிடவும்.
உண்ணும் நாளளவு :
10,20,30,40, என்னும் நாளளவுகளில் மருந்து சாப்பிடவும்.
பத்தியம் :
உப்பு,புளி,காரம்,குறைத்து சாப்பிடவும்,
பாகற்காய் ,அகத்திக்கீரை,புகை,மது பழக்கம் ,நீக்கவும்.
காலிப்ளவர் ,இறைச்சி,தக்காளி,முட்டைகோஸ்,பால் பொருட்கள் போன்ற சுண்ணச் சத்து உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.
தீரும் நோய்கள் :
சிறுநீர்க்கல்லடைப்பு ,சதையடைப்பு,மதுமேகம் ,பிரமேஹம்,மூத்திர தோஷம்,நீர்மேகம் ,வாந்தி ,உடல் காந்தல்,அஸ்தி சூடு,கைகால் எரிவு,இருமல்,சயம்,மூத்திர கிரீச்சரம் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும்.
